December 5, 2025, 9:42 PM
26.6 C
Chennai

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ: மலையேற்றம் சென்ற மாணவர்கள்; விமானப்படை உதவியுடன் மீட்புப்பணி

IMG 20180312 WA0005 - 2025

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ:.. விமானப்படை உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரம்

போடி: குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், இரவில் மீட்புப்பணி மேற்கொள்வது கடினம்,  பணி ஹெலிகாப்டர் மூலம் தொடர்ந்து நடைபெறும். காட்டுப்பகுதியில் தீப்பிடித்த இடங்களை ஆய்வு செய்தபின் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கும். மருத்துவக்குழுக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். அருகில் உள்ள தனியார் தேயிலை தோட்ட ஊழியர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

*மாணவிகளின் விவரம்

காட்டுத்தீயில் சிக்கிய பெண்கள் சென்னை மலையேறும் குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சில பேர் ஐ.டி. ஊழியர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை 27 பேர் தேனி அருகே உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இன்று மாலை திரும்பியிருக்க வேண்டியவர்கள் காட்டுத்தீயில் சிக்கினார்.

IMG 20180312 WA0007 - 2025

காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளது. அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*திவ்யா, மோனிஷா, ரேணு, பார்கவி, சிவசங்கரி, விஜயலக்ஷ்மி, இலக்கியா, சஹானா, சுவேதா, அகிலா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா, நிவேதா, சாரதா, அணு, ஹேமலதா, புனிதா, சாய் வசுமதி, சுபா* ஆகிய 20 பேர் மலையேறும் பயிற்சி மேற்கொள்ள குரங்கணிக்கு சுற்றுலா வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களில் *மோனிஷா, பூஜா, சஹானா, லேகா, ரேணு, விஜயலக்ஷ்மி, நிவேதா, சாரதா ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயில் சிக்கியிருந்தவர்களில் 12 பேர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட 12 பேரும் திருப்பூரைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது 12 பேரும் காட்டுத்தீயில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 12 பேரில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்றுள்ளது.

IMG 20180312 WA0008 - 2025

*நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர்

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளை முடுக்கிவிட வனத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வனத்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் தீ சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார். மேலும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மீட்புப்பணியில் விமானப்படை
காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. சூலூர் விமானப்படை தளத்திலிருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் மாணவிகளை மீட்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. தமிழக முதல்வரின் வேண்டுகோளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

*25க்கும் மேற்பட்டோர் மாயம்

கொழுக்குமலை என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 25க்கும் மேற்பட்ட மாணவிகள் சிக்கியுள்ளனர். மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட போது கல்லூரி மாணவிகள் காட்டுத்தீயில் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீயில் சிக்கித் தவிக்கும் மாணவிகளை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள்  சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

*காட்டுத்தீயில் சிக்கியுள்ள மாணவிகள் சென்னை, ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

*10 கமாண்டோக்கள் குரங்கனிக்கு விரைவு

காட்டுத்தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க 10 கமாண்டோக்கள் விரைந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கனியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதாக நடந்து வருகிறது. மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா இச்சம்பவத்தில் நேரடியாக தலையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

தற்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது : இரவு சுமார் 8 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் காண்காணிப்பு நடத்தினர். அப்பொழுது காட்டுத்தீயில் சிக்கியிருப்பவர்கள் டார்ச் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டினர். அந்த இடம் குறிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10 கமாண்டோக்கள் குரங்கனிக்கு விரைந்துள்ளனர்.

அவர்கள் இரவு 11.30க்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து குரங்கனி மலைக்கு செல்கின்றனர்.

அவர்கள் இரவோடு இரவாக மலையேறி பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

இருள் நீங்கி காலை வெளிச்சம் வரும் போதே ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் அனைவரும் மீட்கப்படுவர்” என கூறினார்.

https://youtu.be/Fp-z8UcMdzU

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories