
சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



