
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்தவர்களின் நாற்பது நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது குருத்தோலை ஞாயிறு. மனித குலத்துக்கு பணிவை கற்றுக் கொடுக்கும் நோக்குடன் ஜெருசலேமுக்குள் நுழைந்த இயேசு கிறிஸ்துவை, மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்றதைக் குறிக்கும் வகையில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.



