
காவிரி மேற்பார்வை ஆணையத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று திமுக மாநாட்டில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேற்பார்வை ஆணையத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஈரோடு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் நதிநீர் உரிமையைப் பறிக்கும் செயலில் மத்திய பாஜக., அரசு ஈடுபடுகிறது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் விவசாயிகளைத் திரட்டி திமுக போராடும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



