
சென்னை மெரினா கடற்கரையில் விடிய விடிய போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து நேற்று முன்தினம் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று பெசன்ட் நகர் கடற்கரையிலும் பலத்த பாதுகாப்பை மீறி சில இளைஞர்களும், பெண்களும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தடையை மீறி நடக்கும் போராட்டத்தை தடுக்கும் வகையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் 2வது நாளாக நேற்று இரவு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இன்று அதிகாலையில் கடற்கரைக்கு வந்தவர்களை உள்ளே அனுமதிக்காததால், சாலையை ஒட்டிய நடைபாதையிலேயே அவர்கள் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.



