கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் அப்போதைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார். கமல்ஹாசன் விஷாலின் பாண்டவர் அணிக்கு ஆதரவு கொடுத்ததால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
சமீபத்தில் கூட தனிக்கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசனை சரத்குமார் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இந்த நிலையில் தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நேற்று கலந்து கொண்ட கமல்ஹாசனை, சரத்குமார் மகள் வரலட்சுமி சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது கமல்ஹாசனிடம் மனம் விட்டு பல விஷயங்கள் குறித்து பேசியதாக வரலட்சுமி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆடு பகை, குட்டி உறவா? என கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/varusarath/status/980375801550876675



