கல்வீச்சில் படுகாயம் அடைந்த சென்னை கூடுதல் துணை ஆணையர்!

IMG 20180331 WA0043 e1522762143299 - 2026

காவிரி விவகாரத்தில் இன்று நடைபெற்று வரும் போராட்டங்களில், வன்முறை வெடித்தது. பல இடங்களில் கல் வீச்சும் நடைபெற்றது. இந்தக் கல்வீச்சு சம்பவங்களில், சென்னையில், கூடுதல் துணை ஆணையர் குமார் காயம் அடைந்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்தின் போது கல்வீச்சில் கூடுதல் ஆணையர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாகச் சென்ற எதிர்க் கட்சியினரை இரண்டு இடங்களில் தடுப்புகளை அமைத்து போலீசார் தடுக்க முயன்றனர். இரண்டாவது முறையாக சென்னை பல்கலைக்கழகத்துக்கு சற்று முன்னர் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுக்க முயன்ற போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்தது.  போலீஸார் அமைத்த தடுப்புகளை அகற்றி முன்னேறிய போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர்.

இதில் மதுவிலக்கு அமலாக்கத்துறை கூடுதல் துணை ஆணையரான குமாரும் ஆயுதப் படைக் காவலரான முருகனும் படுகாயம் அடைந்தனர்.

சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் கூடுதல் துணை ஆணையர் குமாருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. குமாரும் முருகனும் உடனடியாக,  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். அங்கு இருவருக்கும் காயத்துக்கான உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

சென்னை கூடுதல் துணை ஆணையராகப் பணி புரியும் ஆர்.குமார், சிறந்த பணி செய்தமைக்கான அண்மையில் குடியரசூத் தலைவர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories