
இதுவரை இந்திய இசை அமைப்பாளர்கள் யாரும் செய்திராத Gig Style Show என்ற புதிய பாணியில் அனிருத் இசை நிகழ்ச்சி ஒன்றை லண்டனில் வரும் ஜூன் 16ஆம் தேதி நிகழ்த்தவுள்ளார். இலண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் இசை நிகழ்ச்சி நடைபெறும் கலையரங்கத்தின் இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பிரபல இணையதளங்களிலும் ( டிக்கெட் மாஸ்டர்) இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஜூன் 17ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் Zenith என்னுமிடத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை அனிருத் நடத்துகிறார். பாரீஸில் இதுவரை எந்த தமிழ் இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு இசை நிகழ்ச்சிகளையும் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



