சென்னை: கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்ட நிலையிலும் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, இன்று திமுக., சார்பில் முழு அடைப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அதன்படி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடையடைப்பு, பஸ் மீது கல்வீச்சு, சாலை மறியல், ரயில் மறியல் என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர் திமுக.,வினர்.
திமுக., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சென்னை மெரினாவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். பின் தர்ணாவில் ஈடுபட்டவரை போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வந்து, கைது செய்து மண்டபத்தில் சிறை வைத்தனர்.
இந்நிலையில், மண்டபத்தில் சிறைவைக்கப் பட்ட நிலையிலும், அங்கே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாரதிதாசன் மற்றும் ஸ்ரீமதி இணைக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!