
மயிலாடுதுறை: ’திருடனுக்கு பதில் ஹெச்.ராஜாவையே மக்கள் உதைப்பார்கள்’ என்று வன்முறையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார் காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருகின்றது. மேலும் “பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய விவகாரத்துக்குப் பின் தமிழக மக்கள் திருடனையும், ஹெச்.ராஜாவையும் பார்த்தால் திருடனை விட்டுவிட்டு, ஹெச்.ராஜாவை உதைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்னை தொடர்பாக, சென்னையின் ஒதுக்குப் புறமாக நடக்கக் கூடிய ஐபிஎல் மேட்சை நிறுத்த வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல.
மத்திய அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகளில் பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், கேஸ் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்தியஅரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.
ஈ.வே.ரா. நாயக்கர் ஏற்கெனவே பாம்பை அடிப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வன்முறைப் பேச்சுகளை கொட்டித் தீர்த்தவர். அவரது வாரிசுகளும் அவ்வாறே நாகரீகமற்ற முறையில் பேசுவதில் வியப்பு ஒன்றும் இல்லை!



