
சென்னை: தாம்பரம் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தாம்பரம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) வருகிற 9ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை வாரம் தோறும் திங்கட் கிழமை மற்றும் புதன் கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து மாலை 5.30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30க்கு கொல்லத்தை சென்றடையும்.
அதேபோல்,கொல்லம்-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (06028) வருகிற 10ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை வாரம் தோறும் செவ்வாய்க் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் கொல்லத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு முன்னதாகவே தொடங்கி விட்டது. – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.



