நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் இன்று தனது தனிப்பட்ட இணையதளத்தைத் தொடங்குகிறார். இன்று காலை 10 மணி முதல் இது ரசிகர்களுடனான தொடர்புக்காக பயன்பாட்டுக்கு வருகிறது.
கேப்டன் விஜயகாந்தின் கலைவாரிசான சண்முக பாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த சண்முகபாண்டியன், இரண்டாவது படமான மதுரைவீரன் படத்தில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின்னர் தேமுதிக., கட்சியைத் துவங்கி எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோதும், தனது ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். அது போல் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக, அவரது வாரிசான சண்முகபாண்டியனும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட தற்காலத்தில் www.shanmugapandian.com என்னும் இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறார். தனது பிறந்த நாளான ஏப்ரல் 6 இன்று காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறியிருக்கிறார்.