சென்னை: காவிரி உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் திருச்சியில் நடைப்பயணத்தைத் தொடங்கி தஞ்சை விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்போவதாக ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில், அவரது பயணம் திசை தெரியாத நடைப் பயணம் என கருத்து தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர், காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக இல்லை; அரசியலுக்காகவே மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்கிறார் என்று விமர்சித்தார்.
மேலும், திசை தெரியாமல் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொள்கிறார் என்று கருத்து தெரிவித்தார்.