
காவிரி மேலாண்மை விவகாரம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக நடிகர் சங்கம் நாளை ஒருநாள் அறவழி போராட்டம் நடத்தவுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில் ரஜினி, கமல் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் அஜித், விஜய் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவருமே சென்னையில்தான் இருப்பதால் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் இருப்பினும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் நடிகர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் காவிரிக்காக குரல் கொடுத்து வரும் ரஜினி, கமல் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். ஒருவேளை நாளைய போராட்டத்தில் அஜித், விஜய் கலந்து கொண்டால், வாட்டாள் நாகராஜ் லிஸ்ட்டில் அஜித், விஜய் படங்களும் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது



