
உழவன்’ என்ற கைபேசி செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
வேளாண் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடைய வசதியாக உழவன் என்ற கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘உழவன்’ செயலி மூலம் வேளாண்மை தொடர்பான திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர்காப்பீடு விவரங்களை அறியலாம்.
டிராக்டர், பவர் டில்லர் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்றவைக்கு மானியம் பெற செயலியில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



