
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி “புதிய தலைமுறை” டிவியின் நிருபராகப் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் வைகை அணை அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதியதில் ஆண்டிபட்டி “புதிய தலைமுறை” நிருபர் கோவிந்தராஜ் பலியானார். இரு சக்கர வாகனத்தில் வந்த நாச்சியார்புரத்தை சேர்ந்த சுதன் (19) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார் .



