காவிரிக்காக ஆயுள் முழுக்க சிறையில் இருக்கத் தயார் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முழங்கினார்.
தஞ்சை சில்லத்தூரில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் விவசாயிகள் மத்தியில் பேசினார் ஸ்டாலின். அப்போது அவர், “காவிரி பிரச்னைக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நாங்கள் தயார். பெண்கள் கூட்டம் அதிகமாக வந்துள்ளது, இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பிரதமர் ஹெலிகாப்டரில் சென்றாலும், பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவது உறுதி” என்றார்.




