பேச்சு சீரடைய வேண்டுமானால், தேமுதிக., தலைவர் விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அன்பர்கள் சிலர்.
விஜயகாந்த் கடந்த ஏப். 5 அன்று சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்கா கோயிலுக்குச் சென்றார். அங்கே கோயில் கொண்டிருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனையும், ஈசன் சப்தபுரீஸ்வரரையும் வழிபட்டார். தனக்கு நன்றாகப் பேச்சு வர வேண்டும் என்பதற்காக அவர் அம்பிகையிடமும் பெருமானிடமும் வேண்டிக் கொண்டார்.
இந்தச் செய்தியைப் படித்த அன்பர்கள் பலர், சமூக வலைத்தளங்களில் திருகோலக்கா தல பதிகத்தை விஜயகாந்த்க்கு அனுப்பி வையுங்கள். நம் பரமனை நம்புவர்க்கு வழி காட்டிடுங்கள் விரைவில் குணம் பெறட்டும் என்று கருத்துகளைப் பதிவிட்டுள்ளன.
சரிவர பேச்சு வராத பலரும் இங்கு வந்து வழிபட்டுத் தெளிவாகப் பேசும் திறனைப் பெறுகிறார்கள். இந்தத் தலத்தில் பொற்றாளம் வழங்கும் விழா வரும் 21-4-18 இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது.
திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி உடனுறை தாளபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தொலைவில் உள்ளது.




