
சென்னை: சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, சென்னை அணி பங்கேற்கும் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கான டிக்கெட் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் ஏப்.,14ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதற்கு பின்னர் கட்டணங்களை திரும்பப் பெற முடியாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.



