சென்னையில் 3 பேருந்துகளின் வழித்தட எண் வரும் 20ஆம் தேதி முதல் மாற்றம் பெறுவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
எண்ணூர்- உயர்நீதிமன்றம் செல்லும் சாதாரண பேருந்தின் வழித்தட எண் 56 Nல் இருந்து 4ஆக மாற்றம் பெறுகிறது.
மீஞ்சூர்- உயர் நீதிமன்றம் செல்லும் விரைவுப் பேருந்தின் எண் 156 Nல் இருந்து 4Mஆக மாற்றம் பெறுகிறது.
எண்ணூர்- சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் விரைவுபேருந்தின் எண் 1D cutல் இருந்து 4C ஆக மாற்றம் பெறுகிறது.




