சித்தராமையா மீண்டும் முதல்வராவது சந்தேகம்: இந்தியா டுடே கணிப்பு!

இந்தியா சற்றுமுன்

sidharamaiya in mysore chamundi temple - 2026

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து  இந்தியா டுடே சர்வே கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றாலும், சித்தாராமையாவுக்கு முதல்வர் வாய்ப்பு மீண்டும் கிடைப்பது சந்தேகமே என்று தெரியவந்துள்ளது.

இந்த சர்வேயின்படி காங்கிரஸ் கட்சி 120 முதல் 132 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது. பாஜகவிற்கு 60 முதல் 72 தொகுதிகள் கிடைக்கும் என்றும், ஜனதாதள கட்சிக்கு 24 முதல் 30 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது

காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் முதல்வர் சித்தராமையா மீது அதிக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவர் மீண்டும் முதல்வர் ஆவாரா? என்ற சந்தேகமும் இருப்பதாக கர்நாடக மாநில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வே எந்த அளவிற்கு உண்மை என்பதை மே 15ஆம் தேதி நடைபெறும் ஓட்டு எண்ணிக்கைதான் முடிவு செய்யும்.

தமிழகத்தில் நடத்தப் பட்ட போராட்டங்கள், கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஆதரவாகவும், காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.