
தென்காசி: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்மர் கோயிலுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இன்று காலை வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று காலை 10 மணி அளவில் கீழப்பாவூர் நரஸிம்ஹர் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்த விக்னேஸ்வரனுக்கு ஆலய அர்ச்சகர் பதினாறு திருக்கரம் கொண்ட ஸ்ரீநரசிம்மர் படம் மற்றும் பிரசாதங்களைக் கொடுத்து மரியாதை செய்தார்.
முன்னதாக, நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நேற்று நடைபெற்ற சித்த மருத்து நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விக்னேஸ்வரன் அதன் பின்னர் மாலை இந்தக் கோயிலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது வருகை திடீரென ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில், இன்று காலை நரசிம்மர் கோயிலுக்கு வந்திருந்தார் விக்னேஸ்வரன்.



