
தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் நாளை (16.04.2018) காலை 10 மணிக்கு திருவாருர் பேருந்து நிலையம் எதிரில் விபிகே லாட்ஜ் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து விவசாயிகள், நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன்.
இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பி.ஆர்.பாண்டியன். அப்போது இதனைக் கூறினார்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர்.



