குற்றச்சாட்டுகளுக்கு என்ன விளக்கங்கள் சொல்கிறார் ஆளுநர்?!

Published:

Nirmala Devi audio Governor says accusation against him is - 2026

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். அதன் தொகுப்பு!

தமிழக ஆளுநராக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவுபெற்று பெற்றுள்ளது. பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விசாரணை ஆணையர் சந்தானம் விரிவாக விசாரணை செய்து அறிக்கை அளிப்பார். மாணவிகளை தவற வழி நடத்தியது கண்டனத்துக்குரியது.

நான் நிர்மலா தேவி முகத்தை கூட இதுவரை பார்த்தது இல்லை; எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது! எனக்கு 78 வயது ஆகிறது; எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர்.

என்னை பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம். சந்தானம் விசாரணை கமிஷனால் போலீஸ் விசாரணையில் பாதிப்பு இல்லை. காவல்துறை விசாரணை தனியாக நடக்கட்டும்.

பல்கலைக் கழகங்களின் வேந்தர் அலுவலகம் ஒரு தனிச்சட்டதிகாரம் கொண்ட அலுவலகம். ஆளுனராக அல்ல வேந்தராக விதிமுறைகளின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடமுடியும்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிக்கச் செல்கிறேன். பலபேர் என்னோடு படமெடுத்துக் கொள்கிறார்கள். எனக்கு பேரன் அல்ல கொள்ளுப்பேரன் இருக்கிறார். என்னைத் தவறாகப் பேச வேண்டாம்.

விசாரணை அறிக்கை கிடைத்தபின் அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை அணுக முடியாது – என்றார் ஆளுநர்.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img