மாணவர்கள் குறைவான பள்ளிகளை மூட திட்டம்!

Published:

school - 2026

மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகள் பலவற்றை மூட  அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் கொடுத்த அறிவுறுத்தல்கள்…

குறைந்தபட்ச மாணவர்களின்றி நடக்கும் பாடப் பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.

நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்கள் தேவை. ஏனைய ஊரகப் பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் தேவை என்றும்  அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

11,12ஆம் வகுப்புகளுக்கு 1:40 ஆசிரியர் – மாணவர் விகிதாசாரத்தினை பின்பற்ற வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img