
சென்னை: விளம்பரம் தேடும் எச்.ராஜா, எஸ்வி சேகர் இருவரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவும், எஸ்.வி. சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தினம்தோறும் மைக் பிடித்து செய்தியாளர்களைச் சந்தித்து, அரசின் சார்பில் கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒரே நபராகத் திகழ்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சொல்லப் போனால் தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் பணியைச் செய்து வரும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் மீது புகார் அளித்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் ஹெச்.ராஜா பெண்களையும், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சர் குறித்து தவறாக பேசிய ஹெச். ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



