
திருவள்ளூர்: தங்களை கருணைக் கொலை செய்யக்கோரி வல்லம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 28 குடும்பத்தினர் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கடந்த 2016இல் மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் ஒரு தரப்பினர் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் மனு அளித்தனர்.
மேலும், ஊருக்குள் செல்ல தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் கருணைக் கொலை செய்யக்கோரி வல்லம்பேடு கிராமத்தை சேர்ந்த 28 குடும்பத்தினர் திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் புகார் மனு அளித்தனர். இதனால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



