மதுரை: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 30 ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க இயலாது என்று ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம் கூறியுள்ளார்.
கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளரிடம் இன்று மதியம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்த சந்தானம், சிபிசிஐடி காவல் முடிவடைந்த பின்னரே முருகன், கருப்பசாமியிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
முன்னதாக, பல்கலைக்கழக வேந்தர் என்ற வகையில், ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் வழக்கை விசாரிக்க சந்தானம் குழுவை நியமித்தார்.
அவர் அருப்புக்கோட்டை கல்லூரி, பல்கலைக்கழக துணை வேந்தர், அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணையை முடித்து, சிறையில் உள்ள நிர்மலா தேவியிடமும் விசரணை நடத்தினார்.