திருவண்ணாமலை: விஷ சாராயம் விற்ற வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலை போளூரில் கடந்த 2000ஆம் ஆண்டு விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளச் சாராயத்தில் விஷம் கலந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




