மதுரை: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், மக்களைப் பாதுகாக்கும் மீனாட்சி கோயிலில் தரிசனம் என இரு பொருள் பட டிவிட்டர் கருத்தை பகிர்ந்துள்ளார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், காலை மதுரை மீனாட்சி கோயில் தரிசனம் மத்திய பாதுகாப்பு அமைச்சருடன் மக்களைப் பாதுகாக்கும் அன்னை மீனாட்சியின் அருள்தரிசனம் – என்று குறிப்பிட்டிருந்தார்.
காலை மதுரை மீனாட்சி கோயில் தரிசனம்….மத்திய பாதுகாப்பு அமைச்சருடன்…மக்களைப்பாதுகாக்கும்…அன்னை..மீனாட்சியின்….அருள்தரிசனம்…..@nsitharaman pic.twitter.com/cDcKhDm7N3
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 3, 2018
இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய போது, மத்திய அரசு சீரமைப்புக்கான உதவிகளைச் செய்யும் என்றார்.




