மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியை சீரமைக்க தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நிர்மலா சீதாராமன், கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய போது, மத்திய அரசு சீரமைப்புக்கான உதவிகளைச் செய்யும் என்றார்.
மேலும், மதுரை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசு திட்டங்களை மே.5 க்குள் முடிக்க உத்தரவு இடப்பட்டிருப்பதாகக் கூறினார். தொடர்ந்து, அவருக்கு கருப்புக் கொடி காட்ட்டப் பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, கருப்புக்கொடி காட்டுவது திமுகவினரின் உரிமை; அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.. என்று கருத்து தெரிவித்தார்.




