மதுரை: தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார். திமுக செய்ததை பட்டியலிட ஸ்டாலின் தயாரா என தமிழிசை சௌந்தர்ராஜன் சவால் விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக.,வினர் கருப்புக்கொடி காட்டியது தவறு மட்டுமல்ல கண்டனத்துக்கு உரியதும்கூட!
நிர்மலா சீதாராமனுக்கு தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் தங்கள் தவறை மறைக்கவே திமுக கருப்புக்கொடி காட்டுகிறது. தமிழகத்துக்கு பாஜக., அரசு செய்ததை பட்டியலிட நான் தயார்; ஸ்டாலின் தயாரா? என கேட்டார்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியுடன் திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது நிர்மலா கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டன. இதனால் பரபரப்பு நிலவியது.
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு, இது மத்திய அரசால் தன்னிச்சையாக எடுக்கக் கூடிய முடிவு அல்ல, மாநில அரசுகளுடனும் ஆலோசித்து ஒருமித்த கருத்துடன் எடுக்க வேண்டிய முடிவு என்று கூறியிருந்தார். ஆனால், நிர்மலா சீதாராமன் அலட்சியமாகப் பேசினார் என்று செய்தி ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது.
இதை அடுத்து, பரமக்குடி அருகே கள்ளிக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டத்தின் திமுக.,வினர் ஈடுபட்டனர். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்று கூறி அனுமதி பெற்று, செருப்பு வீச்சு கல்வீச்சு என வன்முறையிலும் இறங்கினர் திமுக.,வினர்.
திமுக.,வினரின் இத்தகைய நடவடிக்கை குறித்து இதுவரை திமுக., தரப்பில் கண்டனமோ, தங்கள் கட்சிக் காரர்கள் செய்த தவறு குறித்து கண்டிப்போ திமுக., தலைமையிடம் இருந்து வரவில்லை. எனவே, திமுக., தலைமையின் தூண்டுதலின் பேரிலேயே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைகளில் திமுக., குண்டர்களை ஏவி விட்டிருக்கிறது என்று பரவலாகப் பேசப் படுகிறது.
கள்ளழகரை…
தரிசிக்கசென்றபோது..மக்களோடுமக்களாக..நம்இந்தியத்
த்திருநாட்டின்..இராணுவஅமைச்சர்….திமுகவின் கருப்புக்கொடி..செயற்கை..சுயநலஅரசியல்..கண்டிக்கபட வேண்டியது…மக்களின் விருப்பம்..இயற்கை..பொதுநல அரசியல்….கொண்டாடப்படவேண்டியது.@nsitharaman pic.twitter.com/qy7iBH1V72— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 3, 2018