- தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக கோடை மழை பெய்து வருகிறது.
- இதே போல நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

இந்த நிலையில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சுமார் அரை மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்



