ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காபூல் நகரின் மேற்கு பகுதியில் முதலில் ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இரண்டாவதாக ஒரு காவல் துறை அலுவலக வளாகத்தில் புகுந்த துப்பாக்கிதாரிகள், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அந்த வளாகத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இரண்டாவது தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடம் ஒரு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த வர்த்தக வளாகமாகும்.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபார்யாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு படைத் தளத்தில், கடந்த திங்கள் கிழமையன்று தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 25 காவல் படையினர் உயிரிழந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். அங்கிருந்து 31 பேரை தாலிபன்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



