மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் நடிகர் கமலஹாசன், தனக்கே புரியாமல் பேசிக் கொண்டிருப்பதை பொது வெளியில் விட்டு மக்களிடமும் கருத்துப் புயலாக வெளிப்பட மெனக்கெடுவார்.
இப்போது, நாட்டில் மிகவும் கொந்தளிப்பான சூழல் நிலவும் போது, பதட்டத்தைத் தணித்து, பொறுப்பான தலைவராகக் காட்டிக் கொள்ளாமல் மேலும் மேலும் அப்பாவிப் பொதுமக்களை உசுப்பி விடும் வகையில் புரட்சி வெடிக்கும், அதை எதிர்கொள்ளும் திறன் அரசுக்கு இல்லை என்றெல்லாம் கருத்துப் பதிவிட்டுள்ளார். அத்துடன், கர்நாடகாவுக்கு ஓடிச் சென்று, காவிரி நீரைத் தரமாட்டேன், மழை பெய்தால் தண்ணீர் தானாக வரும் என்றெல்லாம் தமிழனை கேவலப் படுத்திச் சென்ற குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற கமல்ஹாசன், இங்கே புரட்சி வெடிக்கும் என்று மீண்டும் மீண்டும் உசுப்பி விட்டுள்ளார்.
இப்படிப்பட்ட சமூக அந்தஸ்துள்ள, ஆனால் பொறுப்பற்ற நபர்களின் பேச்சைக் கேட்டு மேலும் கலவரங்கள் வெடிக்கக் கூடாது என்பதால்தான், தமிழக அரசு காஷ்மீரில் நிலவுவதைப் போல், இப்படி இண்டர்நெட் இணைப்பை மூன்று மாவட்டங்களில் துண்டிக்கும் அளவுக்கு வந்திருக்கிறது.
கமல்ஹாசன் போட்ட டிவிட்டர் பதிவு…
தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா?சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்.மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை.அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை!
தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா?சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்.மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை.அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை!
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2018




