தந்தையின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கு நேரில் வாழ்த்து சொன்னார் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன்.
அண்மையில் விஜயகாந்த்தின் 40 ஆண்டுகால கலைத்துறைச் சேவைக்காக பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் லண்டனில் இருந்தார்.
தற்போது சென்னை திரும்பியுள்ள அவர் தம் தந்தையின் இரு கண்களை பச்சை குத்திய கைகளை அவரிடம் நேரில் காண்பித்து அவருக்கு வாழ்த்து கூறினார். பிறகு அவரிடம் ஆசியும் பெற்றார்.




