தூத்துக்குடிக்கு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Published:

edappadi pazanisamy - 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை மற்றும் கலவரம் வெடித்தது. அப்போது வன்முறையைக் கட்டுப் படுத்த நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்  13 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த பலரும் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல தெரிவித்திருந்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி இதுவரை அந்தப் பகுதிக்கு வரவில்லை.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் சனிக்கிழமை தூத்துக்குடி வரவுள்ளதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் கூறப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img