சென்னை சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, போராட்டத்தை அறிவித்து, போராட்டத்துக்கான நபர்களைத் திரட்டி வந்த சமூக சேவகர் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டார். இதற்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவில், நக்ஸலைட் பியூஷ் மானுஷ் கைது வரவேற்கத்தக்கது. சேலம் சென்னை 8 வழி சாலைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட ஒவ்வொரு நபருக்கும் மாதம் 12-20 ஆயிரமும் இரு சக்கர வாகனமும் தருவதாக விளம்பரம் செய்தார். இவரது அந்தப் பொருளாதாரப் பின்னணி என்ன என்று விசாரித்து அவர்களும் சிறையிலடைக்கப்பட வேண்டும்… என்று குறிப்பிட்டுள்ளார்.
நகஸலைட் பியூஷ் மானுஷ் கைது வரவேற்கத்தக்கது. சேலம் சென்னை 8 வழி சாலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட ஒவ்வொரு நபருக்கும் மாதம் 12-20 ஆயிரமும் இருசக்கர வாகனமும் தருவதாக விளம்பரம் செய்தார். இவரது அந்த பொருளாதார பின்னனி என்ன என்று விசாரித்து அவர்களும் சறையிலடைக்கப்பட வேண்டும்
— H Raja (@HRajaBJP) June 18, 2018





சரி , “சறையில௔ அடைகà¯à®•லாமà¯.