சென்னையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கௌதமன் மனைவி, தன் கணவனின் கைது குறித்து பேட்டியளித்துள்ளார். சம்மன் இருக்கான்னு கேட்டவரை இழுத்துட்டுப் போயிட்டாங்க. அவரை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்றே தெரியவில்லை என்றுள்ளார்.
காவிரிப் பிரச்னையை முன்னிட்டு, தமிழகத்தில் ஐபிஎல், போட்டி நடத்த எதிர்ப்பு நிலவியது. இதில் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்து வருகிறது. இதில் தற்போது இயக்குனர் கௌதமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது குறித்து கௌதமன் மனைவி மல்லிகா செய்தியாளர்களிடம் பேசியபோது…. வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போதுதான் வீட்டிற்கு வந்து அவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். சரியாக 2.30 மணி இருக்கும். வீட்டிற்குள் வேகமாக போலீஸார்் 12 பேர் வந்தனர். டிஎஸ்பி கூப்பிட்டதாக கூறினார்கள்.
என் கணவர் சம்மன் இருக்கிறதா என்று கேட்டார்., சம்மன் இல்லை, டிஎஸ்பிதான் கூப்பிட்டாங்க, என்று கூறிவிட்டு சுற்றி நின்றார்கள்.
சும்மா விசாரணைதான் வாருங்கள் என்று கூறினார்கள். என் கணவர் சாப்பிட்டு விட்டு வரலாமா என்று கேட்டார்.
அதற்கு சாப்பிடுங்கள் என்று கூறினார்கள். ஆனால் சாப்பிட சொல்லிவிட்டு அவரை சாப்பிட விடாமல் போலீஸ் சுற்றி வளைத்துக் கொண்டது.
ஒரு பயங்கரவாதியைப் போல் என கணவரை நடத்தினர். பின் சாப்பிடவிடாமல் அவரை இழுத்துச் சென்றனர்.
அவரை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று சொல்லவில்லை.
எதற்காக என்றும் சொல்லவில்லை. இப்போது வரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இவர் கேட்ட போது கூட சொல்லவில்லை. விசாரணை என்று மட்டும் தான் என்று சொல்லி வலுக்கட்டாயமாக இழுத்துச்் சென்றார்கள் என்று கூறியுள்ளார்.
கௌதமன் கைதைத் தொடர்ந்து பாரதிராஜா, வைரமுத்து இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர் ஆகியோரும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது..




