கொட்டும் குற்றால அருவியைக் காண ஆசையா? இதோ பாருங்க…!

நீண்ட நாட்களுக்குப் பின் ஆர்ப்பரித்து கொட்டுகிறது குற்றாலம் பேரருவி. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் துள்ளியபடி, ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர்.

குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், மலைப் பகுதியிலும் கடந்த இரு தினங்களாகவே மழையும், சாலை மழையும் பெய்து வருகிறது. மலைப் பகுதியில் நேற்று கனத்த மழை பெய்தது. இதனால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இருப்பினும், பாதுகாப்பாக குளித்து மகிழும் அளவுக்கு தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் சீசன் சுகத்தை அனுபவித்தபடி, அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். வார நாட்களாக இருந்தாலும், இன்றும் காலையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

ஐந்தருவியில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. குறிப்பாக ஆண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் பரந்து அதிகள அளவில் கொட்டியது. இதனால் காலை முதலே சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்திருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பின் ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றாலம் பேரருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர் சுற்றுலா பயணிகள். இன்றைய காலை நேர வீடியோ பதிவு கீழே…!