
நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் சென்ற புதிய அரசு பேருந்தும் ஊட்டிக்கு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில், பஸ்ஸில் பயணம் செய்த அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனா, அண்மையில் இந்த வழித்தடத்தில் விடப்பட்ட புதிய பஸ் என்பதால், மிகுந்த கவனத்துடன் ஓட்டி வந்ததாகப் புலம்பிய டிரைவர், ஒரு கட்டத்தில் இந்த விபத்தால் மனம் உடைந்து, கண்ணீர் விட்டு அழுதார்.
பஸ் டிரைவர் இதைச் சொல்லிச் சொல்லி வாய் விட்டுக் கதறி அழுதது, பஸ்ஸில் வந்த பயணிகளின் மனத்தைக் கரைத்தது. அவர்கள், பஸ் டிரைவர் அருகே வந்து, தோளைத் தடவி, சமாதானம் செய்தனர்.




பயணிகள௠அனைவரà¯à®®à¯ விபதà¯à®¤à®¿à®²à¯ சிகà¯à®•ாமல௠தபà¯à®ªà®¿à®¤à¯à®¤à¯€à®¾à¯à®•ளே..அதà¯à®ªà®¾à¯‡à®¤à¯à®®à¯.