தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிட்யூட் தலைசிறந்த பல்கலையா? வெளுத்து வாங்குபவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் ஜாவ்டேகர்!

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அண்மையில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எமினன்ஸ் என்ற, தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், இன்னும் தொடங்கப்படாத ஜியோ இன்ஸ்டிட்யூட்டும் கடைசியில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலைப் பார்த்த பலரும் புருவத்தை உயர்த்தினார்கள். தொடங்கவே படாத நிறுவனம் தலைசிறந்த நிறுவனமா என்று ஆச்சரியப் பட்டு சர்ச்சையைக் கிளப்பினர். அதற்கு விளக்கம் கொடுத்து வருகிறார் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என(Institute of Eminence) 6 நிறுவனங்களை அறிவித்தது. இந்நிறுவனங்களுக்கு ஒட்டூமொத்தமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள 6 நிறுவனங்களில் ஐஐடி மும்பை, ஐஐடி தில்லி, ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகிய மூன்றும் அரசு நிறுவனங்கள். மற்ற இரண்டு (மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி) இரண்டும் தனியார் கல்வி நிறுவனங்கள். இவை செயலாக்கத்தில் உள்ளன. ஆனால், ஜியோ இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் இன்னும் தொடங்கப்படவே இல்லை. வெறும் பேப்பர் அளவில் உள்ள ஒரு நிறுவனமான ஜியோ இன்ஸ்டிடியூட் எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது என்ற கேள்வி பலருக்கு எழுந்தது.

இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், ‘நாட்டில் 800 பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், உலகின் தலைசிறந்த 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் நாம் வரவில்லை. தற்போது, கல்வி நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 6 நிறுவனங்கள் அந்த இலக்கை எட்டும்’ என கூறியிருந்தார்.

 

இருப்பினும், இன்னும் அடிக்கல் கூட நாட்டப்படாத ஒரு நிறுவனம் எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றது என்று சமூக வலைத்தளங்கள் பலவற்றில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதனை பலரும் பகிர்ந்தனர். இதனால் எழுந்த பிரச்னையை அடுத்து, இதற்கு விளக்கம் அளிக்கும் முகமாக, பிரகாஷ் ஜாவ்டேகர் அமைச்சகத்தின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமைச்சகத்தின் பெயரில் ஒரு நீண்ட பதிலைப் பதிவு செய்துள்ளார். இந்த மறுப்பு அறிக்கையில், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் என மூன்று விதிகளின் கீழ் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக விளக்கம் கூறப் பட்டுள்ளது.

அவரது பதிவு இதுதான்…

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.