திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது இதனால் பெரும்பாலோனோர் தங்களது விவசாயத்திற்கு மழையை நம்பியுள்ளனர் இந்த சித்திரை மாதத்தொடக்கத்தில் ஓரளவு மழைபெய்தது இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் அதன்பிறகு வெயில் சுட்டரித்தது அதைவிட புதுக்கோட்டை மாவட்டத்தில் தினந்தோறும் சராசரியாக 95முதல் 100டிகிரி வரை வெயில் அளவு இருந்தது என்பது குறிப்பிடதக்கது அதிக கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்தனர் ஆனால் இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதால் மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை வானிலை அறிக்கை மூலம் சொன்னவுடன் வயல்வெளிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் வானத்தையை தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்கள் பிறகு 2.30முதல் வானம்மேகமூட்டத்துடன் காணப்பட்டதால்; சில விவசாயிகள் மழைவரவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இருந்தனர் அதன்விளைவாக 2.45முதல் தொடங்கிய மழை 3.50வரை பெய்தது இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் அது மட்டுமல்ல திருவரங்குளத்தில் அனைத்து மதம் மற்றும் ஜாதியினர் குளிக்கும் குளமானது ஓரளவு நிறைந்தது செய்தி- பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை
திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari