கருணாநிதியின் இல்லம் முதல் காவேரி மருத்துவமனை வரை… அனைத்து மூத்த திமுக தலைவர்கள் கோபாலபுரம் வருகை..
12:53 AM:கோபாலபுரம் இல்லத்துக்கு கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் வருகை.
12:53 AM: கோபாலபுரம் இல்லத்துக்கு கனிமொழி வருகை
12:54 AM திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு
12:54 AM: கருணாநிதியின் மூத்த மகள் செல்வி உள்பட குடும்ப உறுப்பினர்கள் வருகை
12:54 AM: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருகை
1:10 AM: காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
1:17 AM: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் காவேரி மருத்துவமனை வருகை.
1:19 AM கருணாநிதி இல்லம் முதல் காவேரி மருத்துவமனை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு
1:23 AM வழக்கமாக பயன்படுத்தப்படும் சர்க்கற நாற்காலில் அழைத்து வரப்பாடாமல் ஸ்டெச்சர் மூலமாக ஆம்புலன்ஸுக்கு கொண்டு வரப்படுகிறார் கருணாநிதி
1:24 AM மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டது
1:25 AM மிகவும் சோர்ந்துபோய்க் காணப்படுகிறார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
1:26 AM கருணாநிதி இல்லத்துக்கு வெளியே அவரது மகள் செல்வி சத்தம் போட்டு அழுது கொண்டிருக்கிறார்
1:27 AM காவிரி மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு.
1:28 AM மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்தது
1:29 AM மருத்துவமனைக்குள் அழைத்து வரப்பட்டார் கருணாநிதி
1:34 AM தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை முன் அதிக அளவில் திரண்டு வருவதால் காவல் துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமம்
1:34 AM மு.க அழகிரி மருத்துவமனைக்கு வருகை
1:34 AM கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
1:35 AM காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: முதல் சிகிச்சை அறிக்கை அடுத்த 1 மணிநேரத்தில் வெளியாகும் என தகவல்
1:41 AM தயாநிதி மாறன் தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வருகை
1:49 AM சற்று நேரத்தில் அறிக்கை!
கருணாநிதி உடல்நிலை சற்று குன்றியதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் கருணாநிதி அனுமதி அளிக்கப்பட்ட செய்தியை கேட்ட திமுக தொண்டர்கள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளனர். சற்று நேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியாகும் எனத் தகவல் வெளியானது
1:51 AM தீவிர சிகிச்சைப் பிரிவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1:53 AM திமுக தொண்டர்கள் – காவல்துறையினர் தள்ளு முள்ளு ; தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை முன் அதிக அளவில் திரண்டு வருவதால் காவல் துறையினர் கட்டுபடுத்துவதில் சிரமம்
2:03 AM கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை,
2:04 AM கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஜெ.அன்பழகன் உள்ளிட்டோர் உள்ளனர்,
2:06 AM கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு திருமாவளவன் வருகை,
2:10 AM ஆ. ராஜா செய்தியாளரை சந்திக்கிறார் ..
2:19 AM காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை, மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என தகவல், தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்படுத்தப் பட்டது- பாதுகாப்பு அதிகரிப்பு,
2:22 AM மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 25 நிமிடத்தில் ரத்த அழுத்தம் சீரானது என்றார் ஆ ராசா




