சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி அனுமதிக்கப் பட்டுள்ள காவேரி மருத்துவமணை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் நோக்கி தொண்டர்கள் செல்கின்றனர்
.
இதனிடையே, காவேரி மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டார். மேலும், காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் மருத்துவர் கோபால் புறப்பட்டார்.
கோபாலபுரம் இல்லம் செல்லும் வழியெங்கும் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் நிறுத்தப் பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலும் அணைத்து கடைகளும் அவசரமாக மூடப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உச்ச கட்ட பதட்டம் நிலவுகிறது. அனைத்து முக்கிய இடங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டுள்ளன.




