நெல்லை: தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதி உடல் நலம் குறித்து வெளியான தகவல்களால் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதை அடுத்து பல இடங்களில் கடைகள் அடைக்கப் பட்டன.
பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. சீஸன் களை கட்டியிருக்கும் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு சீஸனை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் விரைந்து ஊர் திரும்பினர். ஆனால் பலரும் குற்றாலத்தில் தங்கினர். காரணம், தென்காசி , செங்கோட்டை பகுதிகளில் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப் பட்டிருப்பதாக தகவல்
வெளியானது.
இந்நிலையில், அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் செலுத்த கால அவகாசம் இன்றி, வாகனங்கள் விரைவாக செல்ல அனுமதிக்க படுவதாகக் கூறப் படுகிறது.




