சென்னை: உடல் நலமின்றி காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்த தகவல்களால் கவலை அடைந்த தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்தனர்.
தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு இருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கூட்டத்தைக் கட்டுப் படுத்தவும், அந்த இடத்தைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைந்து போகச் செய்தனர். இன்று நள்ளிரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருவதால் கூட்டத்தை உடனே கலைக்க வேண்டிய கட்டாயச் சூழல் போலீஸாருக்கு எழுந்தது.
இந்நிலையில், அங்கிருந்து கலைந்து சென்ற தொண்டர்கள் கோபாலபுரம் நோக்கி கூட்டம் கூட்டமாகப் டையெடுத்தனர். இதனால் கோபாலபுரம் செல்லும் சாலைகள் நிரம்பி வழிந்தன.




