சென்னை: வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும். இதுதான் இப்போது வலைத்தளங்களில் அதிகம் பேரால் ஷேர் செய்யப் படும் தகவலாக இருக்கிறது.
நேற்றைய முன் தினம் திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்தம் சற்று குறைந்ததை அடுத்து உடனே ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப் பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிகப் பட்ட்டது.
ஆனால் இந்தத் தகவல் கேட்டதுமே சென்னை கொளத்தூர் பகுதியில், ஏடிஎம்., இயந்திரம் உடைப்பு, கார் கண்ணாடிகள் உடைப்பு என வன்முறையில் ஈடுபட்டனர் திமுக., தொண்டர்கள் சிலர்.
இந்நிலையில், இன்று இரவு கருணாநிதி உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அதையே ஆ.ராசாவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இயங்குவதாகவும் கலைஞர் உடல் நிலை சீராகி வருவதாகவும் கூறினார்.
இருப்பினும், இரவு எடப்பாடி பழனிசாமி வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடன் கலந்து பேச உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. மேலும், சில பத்திரிகை அலுவலகங்களுக்கும் வாய்மொழி சமிக்ஞைகள் கொடுக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.
அண்ணாசாலை , ஜெமினி மேம்பாலம் பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப் பட்டிருக்கின்றனர்.




