சென்னை: தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி இரவு 12.30மணி விமானத்தில் கோவையிலிருந்து சென்னை வருகிறாா்.
நாளை காலை 11.15 விமானத்தில்தான் கோவையிலிருந்து சென்னை வருவதாக இருந்தது. ஆனால், தற்போது அவசரமாக முன்னதாகவே வருகிறாா்.
நள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி. முதல்வர் இரவு ஒருமணிக்கு மருத்துவமனை வர உள்ளதால் அதுவரை அறிவிப்பு ஏதும் வர வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், எதற்காக அவ்வளவு அவசரமாக எடப்பாடி பழனிசாமி அரசு விழாவை எல்லாம் ரத்து செய்துவிட்டு காவேரி மருத்துவமனைக்கு வர வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருணாநிதி உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தொண்டர்கள் சற்று உற்சாகமாக இருந்தனர். ஆனால், வெளியுலக சுற்றுப் புறச் சூழலும், காவலர்கள் கெடுபிடியும், எடப்பாடி அவசர ஊர் திரும்பலும் தொண்டர்களைக் கலக்கமடைய வைத்துள்ளது.




