செங்கோட்டை, ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இந்த ஆண்டு பெண்கள் பாதுகாப்பு ஆண்டாக கடைபிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இந்திய ரயில்வே பாதுகாப்பு படையின் மதுரை கோட்ட ஆணையர் முகைதீன் அறிவுரையின் பேரில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர்கள் மனோஜ், ஞானஆனந்த், கிரேஸ்மேத்யூ ஆகியோர் முன்னிலைவகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இவாஞ்சலின் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதனைதொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு, பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியில் தொந்தரவு, வன்கொடுமை, மற்றும் இரயில் பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், பயணத்தின் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆபத்து காலங்களில் ரயில்வே பாதுகாப்பு படை இலவச அழைப்பு எண் 182-ன் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நிலைய ஆய்வாளர் கண்ணன் மாணவியர்களுக்கு வழங்கினார்.
இதனைதொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு குறித்த மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி பள்ளியில் துவங்கியது. இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரயில் நிலையத்தில் நிறைவு பெற்றது.
பேரணியில் மாணவிகள் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் அடங்கிய பாதகைகளை ஏந்திவாறு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி வந்தனர். நிகழ்ச்சியில் இரயில்வே பாதுகாப்பு படை, இரயில்வே மித்ரா குழுவினர் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி -படங்கள்: கண்ணன்



